search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப தகராறு"

    • கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனவேதனை அடைந்த உமா மகேஸ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளுர், ஜி.கே.எம். காலனி, நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.எலக்ட்ரீசியனான இவர் பகுதி நேரமாக கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையிலும் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது38).நேற்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த உமா மகேஸ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி அலறி துடித்த அவரை கணவர் கோபால கிருஷ்ணன் காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் உடல் கருகினார். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுடைய மகன் சந்தன கருப்பு(வயது 23)

    கடந்த 2 ஆண்டுகளுக்கு சந்தன கருப்பு, தனது தந்தையின் சகோதரி மகள் சுமித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு சந்தனக் கருப்புவுக்கும், மனைவி சுமித்ராவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கணவரை பிரிந்து சுமித்ரா தாய் வீடான சாத்தங்குடிக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று சந்தன கருப்பு தனது மகனை பார்க்க சாத்தங்குடிக்கு சென்றார். அப்போது அவரது மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோர் தகராறு செய்து உள்ளனர். மேலும் சந்தன கருப்பு கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

    அப்போது அங்கு வந்த அவரது தந்தை மகாலிங்கம் சமாதானம் செய்து மகனை அழைத்து செல்ல முயன்றார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகாலிங்கம், அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து மகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் நிலை குலைந்து விழுந்த சந்தன கருப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறிந்து சந்தனகருப்புவின் தாய் பேச்சியம்மாள் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சுமித்ரா, மாமியார் மாரியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செ.புதூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.

    இவருடைய மனைவி மீனா(வயது 23). இவர்களுக்கு 4 வயதில் சிவக்குமார் என்ற மகன் உள்ளான்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மீனா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த மீனா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனா உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மீனாவின் தாயார் மணிமேகலை, திருநீலக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    • 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
    • சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு தீபித் (5), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தம்பதி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, மிகுந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடி படுத்திருந்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று காலையில் கணவர் தனசேரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, சசிகலா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருக்கு சொந்தமான விவசாய கிணறு இருக்கும் இடத்திற்கு வந்தார்.

    பின்னர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, இன்று காலை சசிகலாவுக்கு போன் செய்துள்ளார். மகள் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வெட்டுக்கட்டு புதூருக்கு விரைந்து வந்தார். சசிகலாவை வீட்டில் பார்க்க முடியவில்லை. குழந்தைகளையும் காணவில்லை.

    இதனால் மகள் மற்றும் பேரன்களை தேடி, பழனிச்சாமி விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு, சசிகலாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து, உடனடியாக அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து, கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், சசிகலாவை தண்ணீருக்குள் இருந்து மீட்டு வெளியே எடுத்துவந்தனர். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் மாவட்ட வழங்க அலுவலரும், திருச்செங்கோடு உதவி கலெக்டருமான (பொறுப்பு) ரமேஷ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாரியப்பனுக்கும், சீதாலெட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மனைவி இறந்து விட்டால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்துபோன மாரியப்பன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி கீழ மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரிக்குட்டி என்ற மாரியப்பன் (வயது57). இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி சீதாலெட்சுமி(50). இவர்களுக்கு மகேஷ்வரி(33) என்ற மகளும், ஈஸ்வரன்(30) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஈஸ்வரன் கோவையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சிவகிரி தாலுகா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

    மாரியப்பனுக்கும், சீதாலெட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மாரியப்பன் கீழமாரியம்மன் கோவில் தெருவில் தனியாக வசித்து வந்தார். சீதாலெட்சுமி தனது மருமகளுடன் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழாவையொட்டி இரவு அன்னதானம் நடைபெற்றது. சீதாலெட்சுமி கோவிலுக்கு சென்றுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாரியப்பன் அரிவாளால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்று கொண்டிருந்த உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது சீதாலெட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே மனைவி இறந்து விட்டால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்துபோன மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற சிவகிரி போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் அவர் தனது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
    • தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவித்ரா ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
    • இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    பவித்ரா அவரது தாயாருடன் அடிக்கடி பேசி வருவது பிடிக்காமல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் திடீரென வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை துண்டித்து படுகொலை செய்தார்.

    இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் சக்திவேல் (வயது 35). கார்த்திக் (வயது 28).

    கார்த்திக் மனைவி புனிதா (வயது 24). இவர்களுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயாரிடம் தகராறில் ஈடுப்பட்ட புனிதாவை கார்த்திக்கின் அண்ணன் சக்திவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இந்த தகராறு சகோதர்களான சக்திவேல், கார்த்திக் இடையே சண்டையாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை உறவினர்கள் அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடல் திருவாரூரில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.
    • ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 50). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், தானும் அங்கேயே அவருடன் இருப்பதாக கூறி சந்திரன் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சந்திரனை தொடர்பு கொண்ட போது போன் இணைப்பு சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன், அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் உடனடியாக தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

    தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டிலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர் விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கை-கால்களையும் கை, கால்களை கட்டி முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சந்திரன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் திருச்செந்தூர் விரைந்தனர். அங்கு அன்னசத்திரம் அருகே நின்ற சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சந்திரனை தென்காசிக்கு அழைத்து வந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரமாரியாக தாக்கியதால் ஆத்திரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த இருமல் தாங்களை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவரது மனைவி நந்தினி (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நந்தினி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    அப்போது விக்னேஷை வரவழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கனவருடன் நந்தினியை போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வரும் வழியில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது விக்னேஷ் நந்தினியை கீழே தள்ளி தாக்கினார். இதில் நந்தினி மற்றும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த தாய், மகளை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் செய்யாறு டவுன் போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது65). இவரது சகோதரர்கள் முருகேசன், முனுசாமி. அண்ணன்-தம்பிகள் 3பேரும் அருகருகே குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

    அங்கப்பன் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்று காலை அங்கப்பனின் மகள் தண்ணீர் எடுக்க வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக முருகேசனின் மருமகள் வனிதாவின் மீது கைபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை கண்ட அங்கப்பன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வனிதா, அவரது கணவர் ரவிகுமார் மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகியோர் அங்கப்பனிடம் மோதலில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அங்கப்பனின் சகோதரரான முருகேசனின் மகன் ரவிகுமார் அவரது மனைவி வனிதா, வனிதாவின் சகோதரி கவிதா அவரது கணவர் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    தற்போது தண்ணீர் எடுத்து வந்த போது கைபட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்து விட்டது.

    • காலை விஜயகுமாரி விஷம் குடித்து பக்கத்து தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள இடைக்காட்டான் காலா மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜய் குமார், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி விஜயகுமாரி (வயது 59). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட் களாக விஜயகுமாரிக்கும் அவரது கணவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை விஜயகுமாரி விஷம் குடித்து பக்கத்து தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிட்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீ சார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×